கருமித்தனமான எண்ணங்களை புறந்தள்ளுங்கள்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று அந்த மாயவன் போதிக்கின்றான். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுகின்றார்கள். ஆக கடமையை செய்ய சொல்லி அனைவரும் வலியுறுத்துகின்றார்கள். புருஷ லட்சணம் என்றால், ஆணுக்கு அழகு அணிகலன் உத்தியோகம். இந்த கடமையை செய்வதில் தான் எத்தனை குழப்பம் எத்தனை தடுமாற்றம். சரி நமக்குரிய கடமையை தொழிலை நாமாகவா தேர்ந்தெடுத்தோம்? இல்லையே, இது நம் விருப்பம் இல்லாமலேயே நம் மேல் திணிக்கப்பட்டு அல்லவா உள்ளது….