‎தாசியா ? ‎தவயோகியா ? ‎சிவசித்தவாசியோகியா !!! ?

வணக்கம் ‎சிவகுருவே !!! ‎தாசியா ?  ‎தவயோகியா ? ‎சிவசித்தவாசியோகியா !!! ? ‎முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு தவயோகி பரண் அமைத்து கடவுளை காண சொர்க்கத்துக்கு போக கடவுளை வேண்டி யாகம் பண்ணியும் கோடிக்கணக்கான மந்திரங்கள் ஓதிய வண்ணம் இருந்தார்.   ‎தவயோகியின் யாகசாலை எதிர்புறம் ஒருதாசியின் வீடு இருந்தது ‎தாசி தன் தொழிலை கடமை என நினைத்ததுடன் கடவுளை ஒருவினாடியும் மறக்காமல் மனதில் கடவுளின் திருவருளை வேண்டியவண்ணம் இருந்தாள். தவயோகியின் காலமும், தாசியின் காலமும் முடிந்தது தாசி புஷ்பவிமானத்தில் சொர்க்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டாள்‎. தவயோகி நரகத்துக்கு இழுத்துக்கொண்டு சென்றார்கள்….