உன் படைப்பை படைத்திட்டாய்!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்
பாமரன் அகத்தில் உண்மை உணர்த்தும் #சிவசித்தனே!

படைப்பே!
உன் படைப்பை படைத்திட்டாய்!
நீயே படைதவனானாய்!
எம்மையும் படைத்திட்டாய்!
உயிரற்ற கால்நடையாய் இருந்த எம்மை
உயிரறிய செய்ய படைத்திட்டாய் வாசியாய்…….
படைத்த வாசியால் பண்பட்ட
எமை மனிதனாய் படைத்திட்டாய்……
படைத்திட்டாய் வாழ்வியல் நடைமுறையை…..
உயிர் உணர படைத்திட்டாய் உணவுமுறையை…..
அறிந்த உடலால் தேகம் உணர
படைத்திட்டாய் பயிற்சிமுறையை…..
தேகமுணர்ந்த மனதை அகமாக மாற்ற
படைத்திட்டாய் நின் திருநாமமதை…..
படைத்திட்டாய் தமிழுக்கு உயிரை உணர்வால்…..

படைத்திட்டாய் தானாய்
பாரைத் திருத்த ஸ்ரீ வில்வம் வாசியோக மையம்……
படைத்திட்டாய் விதிமுறைகளை…..
பலர் திருந்தி உன்னை உணர்ந்தனர்!
படைத்திட்டாய் நல் எண்ணமதை…..
அதுவும் செயலானது நின் உண்மையாலே!
படைத்திட்டாய் உனக்கு
இயற்கையதை முதல் பக்தனாய்……
படைத்திட்டாய்…. பண்படுத்தினாய்…..
எம்மையும் உம் பக்தனாக!
படைத்திட்டாய் தண்டிக்கும் உரிமையை…..
இயற்கைக்கு முறைதவறி நடக்கையிலே!
படைத்திட்டாய் கழிவில்லா
நற்கோவில் தனை எம்முள்ளே வாசியால்…….
படைத்திட்டாய் மருந்தில்லா
நல்ல உண்மை சிவசித்த உலகமதை……
படைத்திட்டாய் ஆற்றலறியும்
அற்புத தேகமதனை வாசியால்……
படைத்திட்டாய் வாசிதேகக்கலையை
இல்லறத்தோடு இருக்கையிலே……
படைத்திட்டாய் அகஒளி தனை
ஆத்மனாய் நின்னை அகத்தே காண்கையிலே…..
படைத்திட்டாய் சுளுமுனையின்
சூட்சும இயக்கத்தை கழிவகற்றியதுமே…….
படைத்திட்டாய் ஆன்மாக்களை
பலநிலைகளை உணர்த்திடவே……
படைத்திட்டாய் ஏழுநிலைகளை
வாழ்வியல் உண்மை உணர!
படைத்திட்டாய் நெறியான வாழ்வதனை
பிறர் வியக்கும் வண்ணம்…..
படைத்திட்டாய் தனிமனித ஆற்றலை
அகமாய் உள்ளிருந்தே……
படைத்திட்டாய் எம்மை தனதருள்
உணர்ந்த தனிமனிதனாய்……
படைத்திட்டாய் திருவருளை – நான்
வேண்டி நின்றேன் உன் அகத்தே……
படைத்திட்டாய் எண்ணமதை
அகம் சிவசித்தனாய் எண்ணிட……
படைத்திட்டாய் எல்லையில்லா இன்பமதை
சிவசித்த பரவொளிதனில் நின் திருவுருவை காண்கையிலே…..
படைத்திட்டாய் தன்னையே……
தானறியும் தன்மையை…..
படைத்திட்டாய் மனிதகுலம் வாழ
தானாய் உணர்ந்த வாசியை……

எம்மைப் படைத்த நீ
என்னுள் படைத்திட்ட எண்ணம்
எதுவாயினும் நின் திருவருளால்
செய்திட என் எண்ணமதை
நல்லெண்ணமாய் படைத்திட
நின் கால் கொண்டு
நின் தமிழ் மூலம்
மெய்யுணர்த்த திருவடி நாடினேன்!
உய்ய வந்த உண்மையே படைப்பின்
முதல் அணுவே #சிவசித்தனே சரணம்……..!!!!!……..

நீ படைத்த வாசியால்
நீ உணர்த்திய உண்மையால்
பண்பான தமிழானவள்
என்னோடு நயமாக
உள்ளிருக்கிறாள் நின் அகச் செயலாலே!
அகம் நிறைந்த உன்னை
அணுவும் விலகாதிருக்க தமிழால்
உள்மொழிந்தேன் நின் திருநாமமதை!
மொழிந்த வாய் உணரும்முன்னே
அகத்தே தோன்றிட்ட #சிவசித்தஜோதியே
நின் உண்மை பாதம் சரணடைகின்றேன்!!!0021vilvam (2)
http://ift.tt/1lJV676

Leave a Reply