பாமரன் அகத்திலும் உண்மை உணர்த்தும் #சிவசித்தனே

#Sivasithan (7)

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்பாமரன் அகத்திலும் உண்மை உணர்த்தும் #சிவசித்தனே

பராரியாய் பாரினில் உள்ள கழிவோடும்!
பண்பரியா உணவின் கழிவோடும் !
பார்ப்பவர் சொல்லும் எண்ணக் கழிவோடும் !
பயத்தால் தீய எண்ணத்தால் உண்டான கருமருந்தோடும்!
பண்படாமல் பகுத்தறிய தெரியாமல்
பல நோன்பு இருந்து!
பல வேள்வி புரிந்து!
பல கோவில் சென்று!
பல கலைகள் அறிய முற்ப்பட்டு
பலப்பல இன்னல்களால் நோய்க்கு ஆட்பட்டு!
பலவும் பார்த்து
பயனற்று பயந்திருந்த வேளை!
பழந்தமிழ் நகரம் மதுரை சிந்தாமணியில்
பைந்தமிழ் #சிவசித்த_செந்தமிழனின்
படைப்பாம் வாசிதேகைக்கலையை
பயில காலத்தே வந்தேன்!
பாரே அறிய முற்படும் பரமனை
பாமரனாய் வந்தால் உணரலாம் என தெரிந்தேன்!
பலரோடும் எனக்கும் நாடியறிந்த சிவசித்தன்
பண்டைய முறையான தொக்கமதை எடுக்க
பல மாற்றங்கள் என்னுளே!
பயிற்சியை முறையாய் தொடர
பலவருட உடல் கழிவுகள்
படையெடுத்து வர வாசிதலைவனின்
படைப்பில் உருவான #சிவசித்த_திருநாம_மந்திரமதை
பக்கபலமாய் கொண்டு வெளியேற்ற
பண்பட்டது எனது உடல் தேகமாய் வெளிப்பட!
படைத்தவன் தன்னையே பார்த்திட!
பலகாலம் நான் எண்ணிய எண்ணம் மாற்றானுடையது என
பலவழிகளில் உணர்த்தி!
பஞ்சபூத செயல்களை என்னுள் உணர்த்தி!
பஞ்சமும் நவமும் வாசி உணர்ந்தவனுக்கில்லை என
பரம்பொருளாய் உள் மொழிந்து!
பசுமரம் போல் தானியங்கி தனதருளை நோக்கிட
பாமரனானேன் !
பண்படுத்தினீர் என்னுள் இருந்து இயற்கையான இயக்கமாய்!
பதத்தினும் மெல்லிய உண்மையால்
பற்றினேன் உன்னை !
படைத்திடுவாய் என்னை நின் செயலாய்
பற்றின்றி பற்றினேன் உன்னை உண்மை #சிவசித்தனே!
– http://ift.tt/1BdHPFV

Leave a Reply