தரம் தாழ்ந்தவர்கள் எப்படி?

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு அவர்கள் புகலிடம் அளிப்பவர். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் உண்மைகள்.

சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு இயல்பாய் ஏற்படுகின்றது. எளிமையான உணவு, நல்வழியில் கிடைத்தது, இறைவன் கருணையால் கிடைத்தது என்று சாப்பிடுகிறவன் எந்த வித துன்பத்திற்கும் ஆளாவது இல்லை.08092011354

அப்படி இருப்பவனே முதல் தர பக்தன் ஆகின்றான். அந்த முதல் தர பக்தனும் சிவசித்தன் ஒருவனே. அவர் ஒருவர் தான் நான் அறிந்த வரையில் உணவுக்காக ஆசைப்பட்டதும் இல்லை, யார் கொடுத்த உணவையும் புசித்து விட்டு குறை சொல்லவும் இல்லை.

முதல் தர பக்தன் சிவசித்தனே என்பதன் பொருள் அவர் ஒருவர் மட்டுமே. சிவகுருவுக்கான பணியை எந்தப் நிலைலும் ஓய்வில்லாமல் செய்கின்றார். மற்ற எல்லோரும் அவரை காட்டிலும் தரம் தாழ்ந்தவர்களே. நமது தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிப்போமாக.

தரம் தாழ்ந்தவர்கள் எப்படி? பசி என்பது இயல்பாய் ஏற்படுகின்றது. நாம் சாப்பிட ஆசைப்பட்டதை எல்லாம் உண்ண விரும்புகின்றோம். உடனே சிவகுரு சிவசித்தன் அவர்கள் வகுத்துக் கொடுத்த விதிமுறைகள் மனதில் நிழலாடுகிறது.

நமது ஆசையை சுருக்கிக்கொள்கிறோம். அவர் வகுத்துக் கொடுத்த உணவு வகைகளை சூழ்நிலைகளை பொறுத்து தேர்ந்தெடுத்து உண்ணுகிறோம். அப்படிப்பட்டவர்கள் இரண்டாம் தர பக்தன் ஆகின்றான்.

தர்மத்திற்கு உட்பட்ட காமமும் நானே என்று பகவான் கிருஷ்ணன் கூறியதன் பொருள் இது தானே வேறென்ன? இந்த இரண்டாம் தர பக்தனும் உலகில் வாழ தகுதி படைத்தவனே. அவனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.

இதற்கு அடுத்த நிலையில் உள்ளவனோ போலி. அவனுக்கு பசி ஏற்படுகிறது. தனக்கு பிடித்ததெல்லாம் சாப்பிட ஆசை படுகின்றான். அவனும் சிவகுருவின் தொடர்பில் இருக்கிறான். அவனுக்கு தனக்கு ஏற்பட்ட ஆசை தவறு என்றே புரியவில்லை.

தவறான ஆசையில் இருந்து மீள வேண்டும் என்று வெளிப்படையாக சிவகுருவிடம் தெரிவிப்பவனுக்கோ அதை வெற்றி கொள்ள கூடிய வழியை அவர் காலத்தால் உணர்த்துகிறார். தவறான ஆசையை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு செயல் வடிவம் கொடுப்பவனோ மிகப்பெரிய தப்பு செய்தவன் ஆகின்றான்.

மிகப்பெரிய தப்பு ஏன் என்றால் அவனுக்கு சிவகுரு சிவசித்தன் வகுத்து கொடுத்த விதிமுறைகளின் படி வாழ்வது தான் தர்மம் என்பது தெரியும். இருந்தும் தவறு செய்கின்றான்.

தவறு செய்வதோடு மட்டும் இல்லாமல் தவறான ஆசை ஏற்பட காரணம் புலன்களின் நாயகன் ஆன சிவசித்தனே என்று குற்றம் சாற்றுகின்றனர். சௌகரியமாக அவர் சிவகுரு என்பதை மறந்தே போனார்கள்.

ஏற்கெனவே சிவகுரு அவர்களுக்கு சேவை செய்ததன் பலன் அவர்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறது. செயல்களால் வந்த பாவத்தின் பலன் கூடும் பொழுது தன் ஆசையை நிறைவேற்றும் வேறு போலியான நபர்கள் மீது நாட்டம் ஏற்பட்டு சிவகுருவை பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகின்றது.

உன்னை நீயே ஏமாற்றி கொண்டு இருக்கும் உன்னை எப்படி அழைப்பது என்றே புரியவில்லை.

சிவகுருவுக்கு துரோகம் செய்யும் உன் நிலையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. உன் முகம் கூட அழகாக இல்லையே. இஞ்சி தின்ற குரங்கு போல அல்லவா உள்ளது.

சிவகுருவின் திருநாமத்தை உச்சரித்து அவரின் வாசியோக பயிற்சி மீது நாட்டம் செலுத்து, அவருடைய கருணையை தெளிவை அவரின் தொடர்பில் உள்ள போதே பெற முயற்சி செய். பிரிந்து சென்றால் எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் அவரின் தொடர்பு கிடைப்பது அரிது.

உன்னை நினைக்கவே பயமாக இருக்கிறது என்ன காரணம்?

நீ விரும்புவதோ மலம் தின்றும் பன்றியின் வாழ்கை. அதற்கு உணவு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. மலத்திற்காக சண்டை போட்டு கொள்ளும் போக விஷயத்திலும் அதற்கு உறவுமுறை என்பதே கிடையாது.

இயற்கையானது உன் இச்சை படி தற்பொழுது உள்ள உடலை அழித்து உன்னை பன்றியின் உடலுக்கு தயார் படுத்துகிறது.

சிவகுரு சிவசித்தன் கூறியபடி அனைத்தையும் விட்டு விட்டு அவர் வகுத்துக் கொடுத்த தர்மம் படி வாழ்ந்து நலமடைவாயாக.

அல்ப ஆசைகளை கூட பூர்த்தி செய்யும் சிவகுருவிற்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இதுதானா? சிந்தித்து பார். இருபதாம் ஆண்டு துவக்கத்தில் அவர் வாட்டத்துடன் உட்காரவில்லை எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தும் லட்சியத்துடன் வீற்று உள்ளார்.

நன்றி சிவகுருவே 

பெயர்          : கணேஷ்குமார். S

வாசியோக வில்வம் எண் : 13 03 010

அலைபேசி    : +91 93441 5119

முகவரி        : ஹரே கிருஷ்ணா மாவுமில்

                              அவனியாபுரம்,

                மதுரை -12.

Leave a Reply