மாற்றான் எண்ணமதை என்னுள் எழாமல்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

பாமரன் அகத்தில் உண்மை உணர்த்தும் #சிவசித்தனே!#Sivasithan (16)

மறைநாதன்!
மறை ஓதும்!
மறை வேதமே!
#சிவசித்த_திருநாமமே!
மறைந்திருக்கும் மறைபொருளை
மக்கிகிடக்கும் உடல் கழிவகற்றி
மகிமை உணர்த்தி உண்மை உடலாலே
மாயை சூழ்ந்த உயிரை
மந்திரமாய் தன் நாம வலிமையால்
மாற்றி கழிவகற்றி
மனதை அகமாக உணர்த்தி
மண்டிட்ட சர்ப்பத்தை
மகுடியின்றி ஆடவைத்து
மாற்றான் எண்ணமதை என்னுள் எழாமல்
மனதார நின் நாமமதை உரைக்க
மயங்கியே நான் போனேன் தாமரையாய்
மலர்முகம் #சிவசித்த_சூரியமுகம் கண்டதுமே!
மனத்தால் நின்னை நினைத்த
மறுகணமே நின் மணமது
மலருதே என் அகமது உணருதே!
மாசற்ற தேகமதை வாசியால் அளித்து
மற்றுமோர் முறை ஜனிக்க வைத்து
மறைபொருளாய் எம்முள் இயங்கி
மாசற்ற தேகபிரபஞ்சத்தை என்னுள் உணர்த்தி
மாயலீலையாய் உண்மை விளையாட்டை
மங்காத அகத்தில்
மறையாத ஜோதியாய்
மாலைத் தென்றலாய் உள்ளார்ந்து உணர்ந்து
மதி அறியவைத்து தனதருளை காட்டி
என்னுள் நின்னை நோக்கிட
யாதொரு பேறு பெற்றேனோ
நின் திருவருளை வேண்டியே
திருப்பாதம் தஞ்சமடைந்துவிட்டேன்!
உய்ய வழியில்லை
உணர்த்த உம்மைத் தவிற யாருமில்லை
#சிவசித்த_அகம்_கடந்த_அகமனனே அருள்தருவாயே
அனுதினமும் நின் நினைப்பின்றி
வேறொன்றும் அறியா எனக்கு!!!

நன்றி சிவகுருவே!!!
http://ift.tt/1lJV676

Leave a Reply