சிவசித்தன் வாசியோகம்: நான்கு வருட காலம் முதுகு வலியும் இருந்தது…

ஓம் சிவகுருவே சரணம்!

 

பெயர் : V. நிறைகுளம்

வயது : 36

வில்வம் எண் : 1110009

பயிற்சிக் காலம் : 2 வருடங்கள்

வருகை நாட்கள் : 630 நாட்கள்.

 

வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :

      எனக்கு மலட்டுத்தன்மை மற்றும் உடல் வலி நீங்க நான் ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வாசியோகப் பயிற்சிக்கு வந்து சேர்ந்தேன்.

வாசியோகப் பயிற்சிக்கு முன் மேற்கொண்ட மருத்துவம் :

எனக்கு 24 வயதில் திருமணம் நடந்தது. ஐந்து வருட காலம் குழந்தைப்பேறு இல்லாதாதால் அதன்பின் நமது மையத்திற்கு வருவதற்கு முன்னர் நான்கு வருடங்களாக ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் போன்றவற்றில் நானும், எனது மனைவியும் சிகிச்சை மேற்கொண்டோம். நான்கு வருட காலம் முதுகு வலியும் இருந்தது. அசைவம் மட்டும் சாப்பிடுவேன். வேறு கெட்ட பழக்கங்கள் கிடையாது.

 வாசியோகப் பயிற்சியில் :

      சிவகுரு அவர்கள் நாடி பார்த்தபோது விறைப்புத் தன்மை குறைவாக இருக்கும். விந்து விரைவில் வெளியேறிவிடும். நடு முதுகுவலி இருக்கும் எனக் கூறினார்கள். மேலும், பயிற்சி செய்து சரிசெய்துவிடலாம் எனக் கூறினார்கள். பயிற்சிக்கு வந்தவுடன் முதுகுவலி முற்றிலும் குணம் அடைந்துள்ளது. விறைப்புத் தன்மை முன்பை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னும் முழுமை அடையவில்லை. முழுமை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எந்தவித மாத்திரை, மருந்தும் மேற்கொள்ளவில்லை. பரிசோதனை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

நமது மையத்தின் விதிமுறைகள் கடைபிடிப்பு :

தினமும் அதிகாலையில் பயிற்சிக்குப் பின்னர் கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, சின்னவெங்காயம்(காலை பத்து, மாலை பத்து), நெல்லிக்காய், காரட், கொய்யாக்காய் போன்ற அனைத்தும் சரியாக சாப்பிடுவேன். மலம் முழுமையாக வெளியேறுகின்றது. ஆனால், நேரம் அதிகம் ஆகின்றது. சாப்பாடு நேரம் சரியாக உள்ளது. சப்பாத்தி கடந்த ஒரு வருட காலம் சாப்பிடுவதை நிறுத்தி உள்ளேன். நமது பயிற்சிக்கு வந்ததற்குப் பின்னர் எண்ணெய் பலகாரம் சாப்பிடுவதில்லை. மாதம் ஓரிரு நாட்கள் வீட்டில் செய்யும் வாழைப்பூ வடை சாப்பிடுவேன். மாதத்தில் ஐந்து முறை தாம்பத்தியம் வைத்துக் கொள்வேன். பயிற்சிக்கு வந்த பின்னர் இப்பொழுது தாம்பத்தியத்தில் முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. மன நிறைவு உள்ளது.

வாசியோகம் பற்றிய தனிப்பட்ட கருத்து :

நமது பயிற்சி மூலம் மாத்திரை, மருந்து இல்லாமல் புரட்சி நடக்கின்றது. உடல் நன்கு சுறுசுறுப்பாக உள்ளது. மற்ற நண்பர்கள், உறவினர்களிடம் நமது வாசியோகப் பயிற்சியினைப் பற்றிக் கூறி வருகின்றேன்.

நன்றி !

 இப்படிக்கு,

சிவகுருவின் திருவடியில்,

நிறைகுளம்.

****

Leave a Reply