கழுத்து வலி, வண்டியில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக கை, கால் வலி போன்ற பிரச்சனைகள் …

ஓம் சிவகுருவே சரணம்!

பெயர் : R. பிச்சைக்கனி
வில்வம் எண் : 1201021
பயிற்சிக் காலம் : 1 வருடம் 9 மாதங்கள்
வருகை நாட்கள் : 630 நாட்கள்.
வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :

எனக்கு கழுத்து வலி, வண்டியில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக கை, கால் வலி போன்ற பிரச்சனைகள் உள்ளது. இத்தீர்விற்காக நான் ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வாசியோகப் பயிற்சிக்கு வந்து சேர்ந்தேன்.

வாசியோகப் பயிற்சிக்கு முன் மேற்கொண்ட மருத்துவம் :

மேற்கூறிய வலிகளுக்கு ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம் பார்த்தேன். மாத்திரை, மருந்து சாப்பிடும் காலங்களில் சரியானது போல் இருக்கும். பின்னர் மீண்டும் வலி வந்துவிடும். அசைவம் சாப்பிடுவேன். வேறு எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் கிடையாது.

வாசியோகப் பயிற்சியில் :

சிவகுரு அவர்கள் நாடி பார்த்தபோது விபத்தின்போது கீழே விழுந்ததால் வலது பாகம் நரம்புகளில் இரத்த ஓட்டம் இல்லை என்றும், கிட்னி பிரச்சனை வருவதற்கு உண்டான வாய்ப்பும், தலைவலியும் உள்ளதாகக் கூறினார்கள். மேலும், பயிற்சி செய்து சரிசெய்துவிடலாம் எனக் கூறினார்கள். பயிற்சிக்கு வந்தவுடன் சில மாதங்களில் உடல் வலி முற்றிலும் குணம் அடைந்துள்ளது. பல் வலி ஏற்பட்டு சிவகுருவிடம் கேட்டு பற்களை பிடுங்கிவிட்டு பல் கட்டி உள்ளேன்.

நமது மையத்தின் விதிமுறைகள் கடைபிடிப்பு :

தினமும் அதிகாலையில் பயிற்சிக்குப் பின்னர் கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, சின்னவெங்காயம், நெல்லிக்காய், காரட், கொய்யாக்காய் போன்ற அனைத்தும் சரியாக சாப்பிடுவேன். மாதத்தில் ஓரிரு நாட்கள் சப்பாத்தி சாப்பிடுவேன். உணவு நேரம் மாதத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வெளியூர் செல்வதால் மதிய உணவு மட்டும் மாறுபடுகின்றது. விசேஷ வீடுகளுக்கு சென்றால் வடை சாப்பிடுவேன். வீட்டில் என்றாவது எண்ணெய் பலகாரம் ஒரு நாள் மட்டும் சாப்பிடுவேன். மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தாம்பத்தியம் வைத்துக் கொள்வேன். பயிற்சிக்கு வந்த பின்னர் இப்பொழுது தாம்பத்தியத்தில் முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. மன நிறைவும், உடல் ஆரோக்கியமாகவும் உள்ளது.

வாசியோகம் பற்றிய தனிப்பட்ட கருத்து :

எனது உடல் சுறுசுறுப்பும், மன நிம்மதியும், சந்தோஷமும், நமது பயிற்சி மூலம் கிடைத்துள்ளது. மற்ற நண்பர்கள், உறவினர்களிடம் நமது வாசியோகப் பயிற்சியினைப் பற்றிக் கூறி வருகின்றேன். எனது தூண்டுதலினால் ஐந்து நபர்களை பயிற்சியில் இணைத்துள்ளேன்.

நன்றி !
இப்படிக்கு,
சிவகுருவின் திருவடியில்,
R. பிச்சைக்கனி.

Leave a Reply