சிவகுரு சிவசித்தனின் கூற்று நீ ஒரு நடைபிணக்கல்

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு ,

சிவகுரு சிவசித்தனின் கூற்று நீ ஒரு நடைபிணக்கல்

ஆலயத்தில் உள்ள கல்லில் உள்ள உண்மையை உணர நீ மாறவேண்டும் நான் அறுபதுவயதுவரை மனம்  நடைபிணக்கல்லாய் உடலில் நடைபிணமாய் காரணம் தகாத உணவு மற்றும் செயல்கள் உடல் கழிவுகள் அதிகமாகியது பிணிகள் துன்பங்கள் அதிகமாகியது அவைகளை போக்க ஆலயக்கல்லிடம் நடைபிணக் கல்லிடம் சென்றேன்.

      கல் கல்லாய் தான் உணர்ந்தது மாற்றம் எதுவும் தெரியவில்லை  சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் சிவகுரு சிவசித்தன் வாசிதேகக்கலை பயிற்சி உணவுகட்டுப்பாட்டுடன் விதிமுறைகள் தவறாமல் செய்துகொண்டு வருகின்றேன் உடல் தேகமாகியது மனம் அகமாய் மாறியது  அகம் உணர்வு பெறுகிறது தேகம் உயிர் பெறுகிறது

     சிவகுருசிவசித்தன் உத்தரவு வருடம் ஒருமுறை ஆலயம் சென்றுபார் ஆலயம் சென்றேன் சிவகுரு சிவசித்தன் மூன்று நாமங்களை முறைப்படி சொன்னேன் அகத்தில் உள்ளவரை உண்மையாய் உணர்ந்தேன் ஆலயக்கல்லில் உண்மையை உணர்ந்தேன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவர்.

     சிவகுருசிவசித்தன் அன்று பிணிகளின் வேதனையுடன் பலபல  மந்திரங்களை சொன்னபோது உடல் மனம் உணராததை சிவகுரு சிவசித்தன் வழங்கிய அவர் மூன்றே மூன்று நாமங்களை சொன்னவுடன் தேக ஆற்றல் உணர்வை தேக அசைவுடன் உணர்ந்தேன் ஆலயக்கல்லில் உள்ளதை அகத்தில் உணர்ந்தேன் அகத்தில் உள்ளவர் அங்குமிங்கும் எங்கும் உள்ளார்.

தேகமே ஆலயம்

அகமே இறைவன்

      அன்று ஏன் சிந்திக்கும் ஆற்றல் செயலாகவில்லை. உடல் கழிவுகள் தான் காரணம் வாசிதேகக்கலையால் கழிவுகள் நீங்கியது இன்று சிவகுருசிவசித்தன் சிந்திக்கும் ஆற்றலை எனக்குள் இயக்கி அகத்தில் உள்ள பேரோளியானை உணர வைக்கிறார். வாழ்வின் இறுதி வரை அவரை பின்தொடர்ந்து இன்னும் பல உண்மை நிலைகளை உணர்வதே என் பாக்கியம்.

நன்றி சிவகுரு சிவசித்தன் அவர்களுக்குபெயர்                  : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                       : காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply