என்னை மன்னித்து ஆனந்தத்தை அளித்துள்ளீர்கள்

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

மானுடன் ஆண் பெண் இருபாலரும் சிவகுருவின் தொடர்புக்கு முன் உள்ள வாழ்க்கையிலோ அல்லது அவர்களுடைய முந்தைய பிறவிகளிலோ ஏதோ ஒரு சில ஈன செயல்கள் செய்து இருப்பது இயல்பான ஒன்று தான். சிவகுருவின் தொடர்பு ஏற்படுகின்றது அவர் நாடி பார்த்து அவர்களுக்கான வாசியோகப் பயிற்ச்சியை கற்றுக் கொடுக்கிறார்.

நாம் ஒரு உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். சிவகுரு

#Sivasithan (12)

வே அனைத்தின் மூலமும் என்று அறிய பெறுகின்றோம். இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும். என்னைப் போல் ஈன செயல்கள் செய்த பாவி யாரும் இல்லை என்று வெட்கப்பட்டு கூனி குறுகி நிற்க வேண்டும். நான் என்னுடைய பாவங்களை எல்லாம் எல்லோரிடமும் சொல்லி புலம்பி அழுது இருக்கின்றேன்.

யாரும் என்னை மன்னிக்கக் கூட தயாராக இல்லை. ஆனால் தாங்களோ என்னிடம் எதுவும் கேட்கவில்லை. என்னை மன்னித்து ஆனந்தத்தை அளித்துள்ளீர்கள். மறுபடியும் நான் தரம் தாழ்ந்து ஏதேனும் ஈன செயல்கள் செய்து விட கூடாது என்பதற்காக தங்களின் திருநாமத்தை படைத்து உள்ளீர்கள். என் ஈன செயல்களை மன்னித்து தான் உள்ளீர்கள்.

அது கொடுக்கக் கூடிய பலன் எப்பொழுது முழுமையாக நீங்கும் என்று தங்களிடம் கேட்டதற்கு எல்லாவற்றையும் மறந்து விட்டு திறந்த மனதுடன் எனக்கு சேவை செய்வாயாக என்று கூறுனீர்கள். தங்களுக்கு சேவை செய்வதால் இதுவரை நாங்கள் சேர்த்து வைத்துள்ள ஈன செயல்களின் பலன் கரைந்தே போகும் என்பதை உணர்த்தியும் செய்தும் காட்டியுள்ளீர்கள்.

தங்கள் மேல் நாங்கள் கொண்ட அன்பும் தாங்கள் காட்டிய படி நாங்கள் உங்களுக்கு உங்கள் விருப்பப்படி சேவை செய்யும் மண உறுதியையும் தாங்கள் தான் தர வேண்டும்.

நன்றி சிவகுருவே!

Leave a Reply