கருமித்தனமான எண்ணங்களை புறந்தள்ளுங்கள்

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று அந்த மாயவன் போதிக்கின்றான். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுகின்றார்கள். ஆக கடமையை செய்ய சொல்லி அனைவரும் வலியுறுத்துகின்றார்கள். புருஷ லட்சணம் என்றால், ஆணுக்கு அழகு அணிகலன் உத்தியோகம்.0003vilvam (9)

இந்த கடமையை செய்வதில் தான் எத்தனை குழப்பம் எத்தனை தடுமாற்றம். சரி நமக்குரிய கடமையை தொழிலை நாமாகவா தேர்ந்தெடுத்தோம்? இல்லையே, இது நம் விருப்பம் இல்லாமலேயே நம் மேல் திணிக்கப்பட்டு அல்லவா உள்ளது. உத்தியோகம் என்ற அணிகலன் அணியாத எந்த ஆண்மகனையும் எந்த பெண்ணுக்கும் பிடிப்பதில்லை.

ஆனால் தன்னுடைய தலைவனுக்கு தன கடமையை செவ்வனே செய்வதற்கு நான் தங்களின் சரி பாதி என்று வாதிடும் எந்த பெண்ணாவது உறுதுணையாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய பதிலாக இருக்கிறது. இன்றைய நவநாகரிக பெண்கள் எளிமையாக வாழ்வதையும் விரும்பவில்லை.

அதே சமயத்தில் நம் மீது திணிக்கப்பட்டுள்ள கடமையை செவ்வனே செய்யவிடுவதும் இல்லை. பிறகு எப்படி ஆனந்தம் அவர்கள் இல்வாழ்வில் மலரும். உலக இயக்கம் செவ்வனே நடைபெற அவரவர் தமக்குரிய கடமைகளை இன்முகத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

அவரவர் சுய தேவைகளை நிறைவேறுவதற்காவது தத்தமது கடமைகளை செய்து தானே ஆக வேண்டும். சிவகுரு சிவசித்தனை சரணடையுங்கள். தேவையான ஆற்றலை அவரிடம் இருந்து பெறுங்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழியுங்கள்.

கருமித்தனமான எண்ணங்களை புறந்தள்ளுங்கள். கடமையை பற்றிய குழப்பங்கள் சிறுதுளி கூட ஏற்படாது. உலக மக்கள் உய்வடைய உதவிக்கரமாக வாழ்வோமாக!

நன்றி சிவகுருவே!

Leave a Reply