சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்?

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

அன்பு எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு உண்மை இருந்தது. உண்மை எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு அன்பு இருந்தது. அன்பு, அறிவு, உண்மை மூன்றும் முழுமையாக நிரம்பியவர் சிவகுரு சிவசித்தன் அவர்கள்.20140615_120153

சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்?

சிவகுரு சிவசித்தன் அவர்கள் அளித்த தகவல்:

மூன்று விதமான நல்லவர்கள் என்னை தேடிக் கண்டுபிடித்து சரணடைகின்றனர். அவர்கள் தான் என் அருகில் இருந்து எனக்கு ஆத்மார்த்தமாக சேவை செய்கின்றார்கள்.

தூய அன்பு எங்கும் கிடைக்கவில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் என்னால் காட்டப்படும் அன்பு தான் தூய்மையானது என்பதை உணர்ந்தவுடன் என்னிடம் அடைக்கலம் கொள்கின்றனர். அவர்களிடம் உண்மை உள்ளது என்பதை சொல்லவும் வேண்டுமா? உண்மை அன்புக்காக ஏங்குகின்றவர்களை நானே நாடிச் செல்கின்றேன்.

உலகமே பொய்மையின் கூடாரம். இங்கு உண்மை என்பதே இல்லை என்று புரிந்து கொண்டு நானே உண்மையின் சொருபம் என்பதை புரிந்து கொண்டு என்னிடம் அடைக்கலம் கொள்பவன் எனக்கு ஆத்மார்த்தமாக சேவை செய்கின்றான். அவனுக்கு என் மேல் உள்ள அன்பை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

அறிவின் காரணமாக செயல்படுபவன் தீவிர முயற்சியின் காரணமாக இறுதியாக அடையக்கூடிய இலக்கு நானே என்பதை அறிந்து கொள்கிறான். அவனும் எனக்கு ஆத்மார்த்தமாக சேவை செய்கின்றான்.

நான்காவதாக பலர் என்னை தற்காலிகமாக சரணடைகின்றனர், அவர்களுடைய அனைத்து விதமான துன்பங்கள் நீங்குவதற்காக. துன்பம் நீங்கியவுடன் அவர்கள் என்னை மறந்தே போய்விடுகிறார்கள். இவர்களிடம் உள்ள ஒரே ஆறுதல் என்னவென்றால் துன்பம் என்றவுடன் மற்றவர்களை நம்பாமல் என்னை சரணடைகின்றானே. அதுவே ஒரு மேம்பட்ட நிலை தான். அவனுக்கு உள்ள ஒரு வாய்ப்பு என்னவென்றால் அவனுக்கு நான் யார் என்பது புரியக்கூடிய வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. துன்பம் நிரந்தரமாக நீங்க வேண்டுமென்றால் நானே பரமகதி என்பதும் உணர்த்தப்படுகின்றது. துன்பம் நிரந்தரமாக அகல அவன் அடுத்த மேம்பட்ட நிலைக்கு வந்து விடுகின்றான்.

நன்றி சிவகுருவே!

Leave a Reply