‎இருளாய் இருண்டு இன்னலாய் ஓடிய காலம்

வணக்கம் ‎சிவகுருவே !!!

200220121938

‎ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!!

‎இருளாய் இருண்டு இன்னலாய் ஓடிய காலம்
‎ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றும் கலங்கலாய்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

‎அழியாக் கழிவால் அல்லல்பட்டு, அவதிப்பட்டு
‎துன்பப்பட் துயரப்பட்ட கலங்கலாய் தொடர்ந்து
‎தொக்கித் துவண்டு ஓடிய காலங்கள் ஒவ்வொன்றும்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

‎அசந்துபோன காலம் ‎அழியாது இனி அவஸ்தைகள்
‎என எண்ணி ஏன் பிறந்தோம் ஏன் வளர்ந்தோம்
என எண்ணி எண்ணியே கலங்கிய காலம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

‪கூடா நட்பில் குலாவிக் கலங்கிய காலம்
‎கூனிக்குறுகி கூசி குற்றுயிராய் கலங்கிய காலம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

‎நாவடக்கமின்றி நாக்கின் சுவைக்கு அடிமையாய்
‎தன்னுயிர் போல் பிற உயிரை அன்பாய் எண்ணாமல்
‎அரக்கனாய் வதைத்துக்கொன்று தின்றேனே
‎தின்றதின் பலனாய் மாண்ட உயிர்கள் கூக்குரலுடன் உணர்ந்த
‎வேதனைகளை விட பன்மடங்காய் ‎உள்ளார்ந்து உணர்ந்தது
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

துயரான ஞாபகம் தொடரும்

Leave a Reply