‎தாசியா ? ‎தவயோகியா ? ‎சிவசித்தவாசியோகியா !!! ?

வணக்கம் ‎சிவகுருவே !!!

‎தாசியா ?  ‎தவயோகியா ? ‎சிவசித்தவாசியோகியா !!! ?

‎முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு தவயோகி பரண் அமைத்து கடவுளை காண சொர்க்கத்துக்கு போக கடவுளை வேண்டி யாகம் பண்ணியும் கோடிக்கணக்கான மந்திரங்கள் ஓதிய வண்ணம் இருந்தார்.   ‎தவயோகியின் யாகசாலை எதிர்புறம் ஒருதாசியின் வீடு இருந்தது ‎தாசி தன் தொழிலை கடமை என நினைத்ததுடன் கடவுளை ஒருவினாடியும் மறக்காமல் மனதில் கடவுளின் திருவருளை வேண்டியவண்ணம் இருந்தாள்.

20140615_120208

தவயோகியின் காலமும், தாசியின் காலமும் முடிந்தது தாசி புஷ்பவிமானத்தில் சொர்க்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டாள்‎. தவயோகி நரகத்துக்கு இழுத்துக்கொண்டு சென்றார்கள். தவயோகி கடவுளைக்கேட்டார் தாசிக்கு சொர்க்கம் ‎தவயோகிக்கு நரகமா?.

‎கடவுள் சொன்னார் உன் எண்ணம் தாசி வீட்டுக்கு வருபவர்களை எண்ணியபடியே ஒவ்வொரு கல்லாக போட்டு வந்தது பெரிய குவியலாக மலைபோல் குவிந்துள்ளது ‎அத்தனையும் நீ சுமக்கவேண்டிய பாவ மூட்டைகள் ‎தாசியின் எண்ணம் முழுமையாய் ஒரே கடவுளை மனதில் ஏற்று மனம் எண்ணம் தூய்மையாய் கற்புக்கரசியாய் இருந்ததின் பலன் சொர்க்கம்‎ தவயோகியாகியான நீயோ கழிவான எண்ணத்தில் நன்னெறி தவறி வேசிக்கும் கீழான வேசியே என்றார்.

‎சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் அனைத்தையுமே விட்டுவிட்ட நிலையில் ‎சிவகுருசிவசித்தனை சரணாகதி அடைபவர்கள் அனைவரும் சிவசித்தவாசியால் உடல் தூய்மையான ஆலயமாகி மனம் கருவறையாகி தனக்குள்ளே உறைந்த இறைவன் சிவசித்தன் என உணர்கின்ற அனைவரும் கற்புக்கரசிகளே!!! ‎சிவசித்தனிடம் பெற்ற வாழ்வை சொர்க்கத்தையும் மிஞ்சி உணர்கின்றேன்.

உடல் கழிவுகளை ஊழ்வினைகளை வதம் பண்ணி சூரசம்ஹாரம் செய்தவரை மறந்து பல்லாண்டுகளாய் சூரசம்ஹாரம் பண்ணுபவர் என்று ஏமாந்ததை மறந்து இந்த ஆண்டும் பலியாய் கிடந்த செயல் சூரசம்ஹாரம் பண்ணிவிட்டு திரும்பி வந்த சிவசித்தனை முழுமையாய் ஏற்காத எண்ணம், தாசியின் செயலா? கற்புக்கரசியின் செயலா?

ஒளித்திருத்தலம் வரும் அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லையே ‎அதில் சிலபேர் பயிற்சியாளார்களாய் சேவையாளர்களாய் போர்வையில் ‎தாசியாய் மாறிய தாசிகளும் உளரே !!!
‎அடைக்கலம் கொடுத்து .‎அனைத்துப் பலன்களும் குடும்பத்துக்கே அளித்து எவரும் உணர்த்தாத இறையாற்றலை பேரானந்தமாய் தேகசற்ப ஆற்றலுடன் வாழவைக்கும் மூலவனை மனதில் ஓரத்தில் தேவைக்கு வைத்துக்கொண்டு மற்ற நட்ட கல்லில் நாட்டம் கொண்டு அலைபவர்கள் கற்புக்கரசிகளா?

அனைத்தையுமே விட்டுவிட்டு சிவசித்தன் ஒருவனே என்பவர்கள் தான் ‎கற்புள்ள சிவசித்த வாசியோகிகளே கற்புக்கரசிகள்

‎நன்றி சிவகுருவே

Leave a Reply