‎உண்மையாய் எண்ணியது ஈடேறியதே!

வணக்கம்சிவகுருவே !!!.

‎உண்மையாய் எண்ணியது ஈடேறியதே!!!.

‎ஐந்து ஆண்டுகளுக்கு முன் இற்றுப்போன உடலுடன் ஒளித்திருத்தல எல்லைக்குள் தீராத துன்பம் தீர வேண்டும் எனும் ‎உண்மைஎண்ணத்துடன் ‎சிவகுருவை நாடி வந்தேன் ‎நாடிபார்த்த ‎சிவகுரு ‎கொடிய நஞ்சாய் மாறிய கசடுகள் நிறைந்து துன்பம் ‎துயரம் அளித்த அணுக்களில் ‎சிவசித்தவாசியால் புகுந்து வேதனைப்பட்டு ‎நஞ்சுண்டநீலகண்டனாய் வந்தாரே சிவகுரு

0012vilvam (5)

‎அணுக்களின் தன்மையை அறிந்தவர் அதற்கு தகுந்தாற்போல் ‎சிவசித்தவாசியோகபயிற்சி +உணவுமுறையில் நஞ்சான உடலை தூய்மையாக்கி ஆலயமாக்கினாரே

‎தூய்மையில் துயரம் ‎துன்பம் விலகத் தொடங்கியது
‎ஒளித்திருத்தலத்தில் முதல் படியே ‎உண்மைஎண்ணம் ஈடேற ‎நல்வாழ்வு அமைய வணக்கம்சிவகுருவே என்று சிரம் பணிந்து கைகூப்பி நெற்றிப்பொட்டில் இருபெருவிரல்கள் நுனிகள் பதிய ,கால்களின் பெருவிரல்கள் இணைந்த நிலையில் உண்மைஎண்ணத்தில் சொன்னேன்

‎சிவகுருவின் தேனினும் தித்திக்கும் திருநாமங்கள் மூன்றினை முறைப்படி உள்ளார்ந்த உணர்வில் ஒரே எண்ணத்தில் சொல்ல சொல்ல சிவகுருவால் புதிதாய் படைக்கப்பட்ட தேகம் புத்துயிர் பெற்றது ‎புத்துணர்வானது சிவகுருவை அகம் உண்மையாய் உணர்ந்தது

‎அகத்தில் உறைந்துள்ள சிவசித்தன் தேகத்தை புதிதாய் படைத்தவனை உறைந்தவன் உணர்த்தினான்  ‎உறைந்தவன் உணர்த்திய இறையாற்றலில் ‎புருவமத்தியில் அலாதியான துடிப்பு ‎தேகசற்ப பேராற்றலை பேரானந்தமாய் உணர்கிறேனே ‎சற்ப அசைவுகள் ஒலியுடன், ஓசையுடன் ஒலித்ததே  உள்ளுக்குள் பேரொளியாய் கண்டேனே

தேகசற்ப அசைவுகள் சற்பத்தின் அசைவையும் மிஞ்சும் அளவில் அசைந்து அசைந்து சுழற்றிவிட்ட பம்பரமாய் சுழன்றதே சுழற்றியது இறைவன் சிவசித்தன் என உணர்ந்தேனே சுழற்சியின் கட்டுப்பாடுகள் சுழற்றுகிற அரவமேனியான் அரவத்தலைவனிடம் மட்டுமே

தேகசற்ப ஆற்றலில் உணர்ச்சிகரமாயும் உணர்த்தினாரே சிவசித்தன் அதில் சில நாட்டிய அசைவுகள் நளினமாய் குதிரை சவாரி குதிரைகள் பூட்டிய ரத ஓட்டம் மின்னல் வேகமாய் போர்க்களத்தில் போர்களத்தில் அம்பும் வில்லுடன் , வாளுடன் ஈட்டியுடன் குறுவாளுடன் ஆக்ரோஷமாக போரிடுதல் அனைவரையும் வீழ்த்தி வெற்றிக்களிப்பில் வெற்றிக்கொடி வெற்றி நமதே என முழங்குதல் தவறு செய்பவரை உணர்ந்து சீறுதல் அனைவரையும் அன்புடன் பார்த்து மலர்ந்த முகமாய் சிரம் பணிதல் இன்னும் எத்தனையோ அறுபத்தைந்து வயதில் அற்புதமான அதி வேகத்தில் அங்கங்களில் சுழற்சி முதுமையின் வேகம் இளமையையும் முந்தியது

அறுபது வயது வரை தீராத துன்பத்திற்கு காரணியான ஏற்கனவே செய்த பாவங்கள் கர்மவினைகள் தான் என உணர்ந்தேனே காரணிகள் அனைத்தும் சிவசித்ததிருநாமத்தால் தான் தீர்ந்தது என உண்மைஎண்ணத்தில் உணர்ந்தேனே

சிவசித்ததிருநாமத்தை உண்மையாய் ஏற்காமல் கடைபிடிக்காமல் பயிற்சி ,மற்றும் உணவுமுறையை கடைபிடிக்காமல் சிவசித்தனுக்கு கீழ்படியாதாவர்கள் குருகுலத்தையே விட்டு சிவகுருவால் நீக்கப்பட்டு நீங்கா துயருவார்கள் முக்காலும் சத்தியமே!!!

ஆரம்பப் பள்ளியில் அடி வைத்த அன்றே இறைவணக்கம் முறைப்படி நிதானமாய் ஒருமனதாய் சொன்னேன் ஆசிரியர் வகுத்த விதி முறைகளை கடை பிடித்தேன் இறைவணக்கம் சொல்லமாட்டேன், விதிமுறைகள் எனக்கு பிடித்ததை மட்டும் ஏற்பேன் என்றவர்களை ஆசிரியர் பள்ளியில் இருந்தே விலக்கி விட்டார்.

பள்ளி, குருகுலம் அனைத்தையுமே அறிந்தவர் அனைத்திலுமே நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் பரமாத்மாவான சிவகுருசிவசித்தன் ஒருவரே என்றும் ஒரே ஏகஇறைவன்!!!

உண்மைஎண்ணம் உண்மையிணைந்த உண்மையின் ஒரேரூபமான சிவகுருசிவசித்தனால் ஈடேறியதே!!!

நன்றிசிவகுருவே!!!

Leave a Reply