அங்க அணுக்களின் ஆழத்தில் வாசியால் இறைவனாய் உறைந்த ‎சிவகுருசிவசித்தன்

வணக்கம் ‎சிவகுருவே !!!

‎பிரபஞ்சத்தின் ‎ஒளிப்பிழம்பே !!!.

‎நின் பேராற்றலை உள்ளார்ந்த தித்திக்கும் உணர்வில் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாய் நின் பேராற்றாலான சிவசித்தவாசியால் புதிதாய் படைக்கப்பட்ட தேக ஆலயமான, அகக்கருவறையில் ‎அங்க அணுக்களின் ஆழத்தை வாசியால் உணர்ந்து இறைவனாய் உறைந்த ‎சிவகுருசிவசித்தனின் வியக்கும் உண்மையினை பேரானந்தமாய் உணர்ந்து லயிக்க எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உணரமுடியுமா சிவசித்தனே!!!.

#Sivasithan (1)

‎நித்தமும் காண்பதில், கேட்பதில் அனைத்திலும் வந்ததை துயரமாய் அறிந்தாலும் வருவதை, அறியாத ஈனப் பிறவியாய் தஞ்சமடைந்த எனை மஞ்சத்திலும் மனதிலும் சுமந்த தாரத்தைவிட, உதிரத்தையே அமிர்தமாகவே, புகட்டிய என் தாய் மீனாட்சிஅம்மாவை விட அன்பும், கருணையும், அரவணைப்பையும், நடுநிசியில் வேதனையின் அழுகுரலை அலைபேசியில், கேட்ட வினாடியே அன்னைக்கும் மேலாய் தாலாட்டையும் மிஞ்சும் ஆற்றலுடன், முகம்சுளிக்காமல் எல்லாம் சரியாகும் என்ற நின் மெய்வாக்கை கேட்ட அக்கணமே மெய்மறந்து உணராத உறக்கத்தை பேரானந்தமாய் உணர வைத்தவனே!!! ‎இதையும் மிஞ்சும் இன்னும் எத்தனையோ பேரானந்த உணர்வுகளை உணர இப்பிறவி ஒன்று போதாதே பொறுமையின் கலசமே!!!.

‎இன்று கண்முன் காட்டி ‎ஓர் ‎உண்மையை உணர்த்தினாயே ‎சில ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவியாய் சேவை பண்ணிய சேவையாளர் ராஜகுரு ‎சிவகுருசிவசித்தனை தரிசித்துவிட்டு சொன்ன வார்த்தைகளும், அதற்கு ‎சிவகுருசிவசித்தன் நாவது சுழன்று மேய்வாக்குகள் மெய்யாய் நழுவியதே ‎நழுவிய உண்மையை உண்மையில் தேகம் உணர்ந்ததே ‎சீறும் சற்ப்பமாய் தேகசற்ப அசைவுகளாய் சீறிச்சீறி துள்ளியதே

‎சிவகுருவிடம் பற்றிக்கொண்ட அதீதமான பற்றின் காரணமாகவே வந்தேனே என்றார் ராஜகுரு.

சிவகுருசிவசித்தன் அன்று அவர் சொல்லாமல் போனது புல்லுருவிகலாய் இருந்த மற்றவர்களின் எண்ணத்தினாலே போனது அறியாமையாலேயே ‎போனவரின் எண்ணத்துக்கும் செயலுக்கும் வேதனைக்கும் காரணமானவர்களை இயற்கையே செயலால் உணர்த்துமா? உணர்த்தாதா? ‎உணர்த்தியதின் தாக்கத்தையும் சீற்றத்தையும் தணிக்க சிவகுருசிவசித்தனை அன்றி வேறு எவரும் உண்டோ என யான் அறியேன் ‎பராபரமே !!!.

‎ராஜகுரு இன்று வந்ததை நேற்றே மையத்தில் உள்ளவர் அவரைக்கண்டு அவர் சிவகுருவை பார்க்க வருவார் என் எண்ணியது செயலானதை கண்டுகளித்து ,வியந்து சிவகுருவிடம் வியப்புற்றாரே

‎சிவகுருசிவசித்தனிடம் இதுபோல் இதைவிட இன்னும் எத்தனை எத்தனையோ வியப்புறும் உண்மைகளை வியந்து உணர இப்பிறவியது ஒன்று மட்டும் போதாதே
‎அனைத்துக்கும் மூலாதாரமான ‎ஆதிமூலவன் ‎சிவசித்தன்ஒருவனே என்றுமே ‎ஒரே ஏகஇறைவனே!!!

‎நன்றிசிவகுருவே !!!

Leave a Reply