“என்னுடைய பக்தர்களின் நலன்களை நானே பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்கின்றேன்”

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

“என்னுடைய பக்தர்களின் நலன்களை நானே பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்கின்றேன்”

 சிவகுருவின் இந்த கூற்று சத்தியமான உண்மை.

அதிகாலை 3.30 மணிக்கு பிரம்மமுகூர்த்த நேரம் அப்பொழுதே எழுந்திருக்க வேண்டும் என்று சிவகுருவை தொடர்பு கொள்வதற்கு முன்பே புத்தகங்கள் வாயிலாக எனக்கு தெரியும். காற்றில் இயல்பாகவே பிராணனின் அளவு கூட இருக்கும் என்று அறிவியல் உலகம் கூறியதையும் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.

நான் பலமுறை அலாரம் வைத்து கடும் பிரயத்தனம் பண்ணி எழுந்திருக்க முயற்சி செய்து இருக்கிறேன். ஏதோ ஒரு சில நாட்கள் எழுந்து இருந்தால் கூட பலமுறை தோல்வியே தழுவி உள்ளேன்.

#Sivasithan (4)

அதிகாலை எழுந்தே ஆக வேண்டும் என்று முயற்சி செய்து இரவு தூக்கத்தை கெடுத்து கொண்டது தான் மிச்சம். அன்றைய பகல் பொழுதில் தூங்கி வழிந்து பகல் பொழுது முழுவதையும் கெடுத்து கொண்டேன்.

சிவகுரு அவர்கள் தொடர்புக்கு பின் தற்பொழுது நான் அலாரம் வைத்து தூங்குவதே இல்லை. இரவு படுக்க போகும் முன் கால் மடக்கி உட்கார்ந்து சிவகுருவின் திருநாமங்கள் உச்சரித்து விட்டு நாளைய பொழுது தங்கள் விருப்பப்படி விடியட்டும் என்று நினைத்த படியே தூங்க சென்று விடுவேன்.

சிவகுரு அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கின்றார்கள். அதிகாலை பொழுது சிவகுரு அவர்களே விழிப்பையும் தருகின்றார்கள். நன்றி சிவகுருவே என்று கூறிவிட்டு எழுந்து அவர் கூறிய அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கின்றேன்.

மையத்திற்கு வர முடியாத நாட்களில் இருக்கும் இடத்தில் வாசியோக பயிற்சியை விடுமுறை எடுக்காமல் செய்பவர்கள் அனைவரையும் சிவகுரு அவர்கள் எழுந்திருக்க செய்கின்றார்கள். இதுவே உண்மை.

பெண்களை பொறுத்த வர மாதவிடாய் காலம் ஐந்து நாட்கள் மையத்திற்கு வரக்கூடாது, பயிற்சி செய்யக்கூடாது.

அந்த காலங்கள் ஓய்வு காலம் என்று எண்ணாமல் கால் மடக்கி உட்காரும் பயிற்சி செய்து சிவகுரு கொடுத்த விதிமுறைகளை கடைபிடிப்பவர்களையும் சிவகுரு பொறுப்பெடுத்து கொண்டு எழுந்திருக்க செய்கிறார்.

களங்கமற்ற பக்தனாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு, மற்ற அனைத்தும் சிவகுருவின் விருப்பம்.

நன்றி சிவகுருவே! 

பெயர்          : கணேஷ்குமார். S

வாசியோக வில்வம் எண் : 13 03 010

அலைபேசி    : +91 93441 5119

முகவரி        : ஹரே கிருஷ்ணா மாவுமில்

                               அவனியாபுரம்,

                மதுரை -12.

Leave a Reply